என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தூத்துக்குடியில் கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது
  X
  கைதான  3 பேரை படத்தில் காணலாம்.


  தூத்துக்குடியில் கஞ்சாவுடன் 3 வாலிபர்கள் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அண்ணாநகர் 3-வது தெருவில் சிலர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.
  • போலீசார் கைதானவர்களிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

  தூத்துக்குடி:

  தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் வாலிபர்கள் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  போலீசார் ரோந்து

  அதன்பேரில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம், தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

  அப்போது அண்ணாநகர் 3-வது தெருவில் சிலர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.

  3 பேர் கைது

  விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி 1-ம் கேட் பகுதியை சேர்ந்த பிரபு வினோத்குமார் (வயது25), அண்ணாநகர் 3-வது தெருவை சேர்ந்த மேத்தபிள்ளை மரைக்காயர் (25), அண்ணாநகர் 6-வது தெருவை சேர்ந்த ஜமால் (25) என்பதும் அவர்களிடம் 1¼ கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்தது.

  இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

  கைது செய்யப்பட்ட பிரபு வினோத்குமார் மீது திருட்டு, அடிதடி உள்ளிட்ட 6 வழக்குகளும், மேத்தபிள்ளை மரைக்காயர் மீது கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

  Next Story
  ×