search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புன்னம்புழா வனத்துக்குள் அத்துமீறி நுழைந்த 3 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம்
    X

    புன்னம்புழா வனத்துக்குள் அத்துமீறி நுழைந்த 3 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம்

    • வனத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஆற்றில் சிலர் மீன் பிடிக்க முயன்றதை கண்டனர்.
    • வனத்துறையினர் 3 பேரையும் கைது செய்தனர்.

    கூடலூர்

    கூடலூர் தாலுகா ஓவேலி வனச்சரகம் புன்னம்புழா ஆற்றுப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வனத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஆற்றில் சிலர் மீன் பிடிக்க முயன்றதை கண்டனர்.

    இதை தொடர்ந்து அவர்களை வனத்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், கூடலூர் கோழிப்பாலம் பகுதியை சேர்ந்த உதயகுமார் (வயது 45), மணிகண்டன் (40) மற்றும் தேவாலா வாழவயல் பகுதியை சேர்ந்த சுதாகரன் (36) ஆகிய 3 பேர் என தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் கருப்பையா உத்தரவின்பேரில் வனச்சரக யுவராஜ்குமார் கைதான 3 பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தார்.

    Next Story
    ×