என் மலர்
உள்ளூர் செய்திகள்

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
- மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து மணல் ஏற்றி வந்த வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
பாபநாசம்:
தஞ்சாவூர் பாபநாசம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெ க்டர் கலைவாணி ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தார்.
அப்போது கோவில் தேவரா யன்பேட்டை குடமுருட்டி ஆற்றிலிருந்து மணல் ஏற்றி வந்து கொண்டிருந்த மாட்டு வண்டிகளை தடுத்தி நிறுத்தினார்.
போலீசாரை பார்த்தவுடன் 3 மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவ ர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
விசாரணையில் எவ்வித அரசு அனுமதி இன்றி ஆற்று மணல் ஏற்றி கொண்டு வந்தது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்குபதிவு செய்து மணல் ஏற்றி வந்த மணல் வண்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






