என் மலர்
உள்ளூர் செய்திகள்

வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.
வளர்ச்சி திட்ட பணிகள் - கலெக்டர் ஆய்வு
நாகப்பட்டினம் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டபணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம், கீழ்வேளுர், கீழையூர் மற்றும் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றுவரும் பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
ஐநல்லூர் ஊராட்சி சவேரியார் கோவில் சுனாமி குடியிருப்பு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் ரூ.11.62 லட்சம் மதிப்பீட்டில் செல்லூர், ஆவராணி, வடுகச்சேரி ஆகிய ஊராட்சி பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணிகளையும், அந்தண பேட்டை ஊராட்சியில் ரூ.23.56 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணியினையும், சிக்கல் ஊராட்சியில் ரூ.28.94 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டுமான பணிகளையும், சிங்கநெரி தோட்டத்தில் ரூ.8.87லட்சம் மதிப்பீட்டில் அமுத குளம் அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
மேலும் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியம் இருக்கை ஊராட்சியில் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணியினையும், நூலகம் கட்டிடம் பழுது நீக்கம் செய்யப்பட்ட பணியினையும், இரிஞ்யூர் அங்காடி கட்டிடம் கட்டும் பணியினையும், 75 அனக்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16.50.லட்சம் மதிப்பீட்டில் வாய்க்கால் தூர்வாரும் பணியினையும், புதிய அங்காடி கட்டும் பணியினையும்,
அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணிகளையும், 75 அனக்குடி, வலிவலம் புதிய அமுத குளம் அமைக்கும் பணி உள்ளிட்ட ஏராளமான பணிகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர்.பசுபதி, பேபி உதவி செயற்பொறியாளர், நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், ராஜாராமன், கீழ்வேளுர் வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன், ராஜகோபால், கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றி, தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






