search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர்கள் வினாத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து பள்ளி முன்பு நின்று போராட்டம் நடத்தினர்.
    X
    ஆசிரியர்கள் வினாத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து பள்ளி முன்பு நின்று போராட்டம் நடத்தினர்.

    வினாத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்

    முதன்மை கல்வி அதிகாரியை கண்டித்து தஞ்சையில் பிளஸ்-2 வினாத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, பட்டுக்கோட்டை ,கும்பகோணம், ஒரத்தநாடு ஆகிய நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன.

    தற்போது பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்து வினாத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் அந்தந்த கல்வி மாவட்டங்களில்நடந்து வருகிறது. 

    அதன்படி தஞ்சை மாவட்டத்தில்  தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய 3 கல்வி மாவட்டங்களில் வினாத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஒரத்தநாடு கல்வி மாவட்டத்தில் மட்டும் வினாத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த கல்வி மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் எங்களுக்கும் வினாத்தாள் திருத்தும் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

     இதையடுத்து நீங்கள் மற்ற 3 கல்வி மாவட்டங்களில் வினாத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டனர்.

    அதன்படி இன்று காலை ஒரத்தநாடு கல்வி மாவட்டத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ஆசிரிய- ஆசிரியைகள் தஞ்சை மாரியம்மன் கோவில் புறவழி சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு வினாத்தாள் திருத்தும் பணிக்காக வந்தனர். அப்போது அங்கு வந்த முதன்மைக் கல்வி அதிகாரி சிவகுமார் நீங்கள் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்துக்கும் சென்றும் வினாத்தாள் திருத்த வேண்டும் என கூறியதாக தெரிகிறது.

    அப்போது ஆசிரியர்களுக்கும், முதன்மைக் கல்வி அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து முதன்மை கல்வி அதிகாரி அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். தொடர்ந்து ஒரத்தநாடு கல்வி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் வினாத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து பள்ளி முன்பு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர் ‌‌ அப்போது முதன்மைக்கல்வி அதிகாரி எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரச முடிவு எடுத்தால் தான் கலைந்து செல்வோம் என கூறினர். இதனால் அங்கு தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.‌ இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×