search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கோயம்பேடு மேம்பாலத்தில் வியாபாரியிடம் கத்திமுனையில் ரூ.1½ லட்சம் பறிப்பு

    கோயம்பேடு மேம்பாலத்தில் வியாபாரியிடம் கத்திமுனையில் ரூ.1½ லட்சம் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி பகுதியை சேர்ந்தவர் ரகீம் (30) அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

    இவர் நேற்று இரவு கடையை மூடிவிட்டு பர்மா பஜார் சென்றார். பின்னர் அங்கிருந்து புதிய செல்போன்கள் வாங்கி கொண்டு இரவு 11 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டி ருந்தார். கோயம்பேடு மேம்பாலம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வந்தபோது பெட்ரோல் இல்லாமல் மோட்டார் சைக்கிள் நின்றுவிட்டது.

    இதையடுத்து ரகீம் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு அருகில் உள்ள பெட்ரோல் பங்க் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ரகீம் வைத்து இருந்த கைப்பையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    அதில் ரூ.1.50 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.2.20 லட்சம் மதிப்புள்ள 5 விலை உயர்ந்த செல்போன்கள் இருந்தன. இது குறித்து ரகீம் கோயம்பேடு பஸ்நிலைய போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா.இவர் ஆட்டோவில் மிளகாய்தூள் விநியோகம் செய்து வருகிறார். இவர் திருவள்ளூர் மணவாள நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைக்கு மிளகாய்தூள்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கே வந்த மர்ம நபர் இளையராஜா மீது எரிச்சல் ஏற்படுத்தக் கூடிய பொடியை தூவினார். அந்த எரிச்சலில் இளையராஜா திரும்பிய போது மர்ம வாலிபர் ஆட்டோவில் இருந்த ரூ.44 ஆயிரத்து 400 ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டார். இது தொடர்பாக மணவாளநகர் போலீசில் இளையராஜா புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×