search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழாவில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அமைச்சர் பெரியகருப்பன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    X
    விழாவில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அமைச்சர் பெரியகருப்பன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

    கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
    சிவகங்கை

    சிவகங்கை தனியார் மண்டபத்தில்  ெதாழிலாளர் நலத்துறையின் சார்பில்   728 கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.12.6 லட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

    கட்டுமானத் தொழி லாளர்கள் நலவாரியத்தின் தலைவர் பொன்.குமார் முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கலந்து கொண்டு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

    விழாவில் அவர் பேசுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அடிப்படையில், தமிழகத்தில் ஏழை எளிய அடித்தட்டு மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.குறிப்பாக தொழிலாளர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள், சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியம், அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவா ரியம் ஆகியவைகளில் பதிவு செய்யப்பட்ட தொழி லாளர்களின் நலன் கருதி, அவர்களை பயன்பெற செய்யும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

    சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 37 ஆயிரத்து 139 கட்டுமானத் தொழிலாளர்கள் கட்டுமான நலவாரியத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் 28 ஆயிரத்து 401 தொழிலாளர்கள் கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா நல வாரியத்தில் புதியதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், 13 ஆயிரத்து 402 பதிவு பெற்ற அமைப்புச்சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ. 5 கோடியே 86 லட்சத்து 59 ஆயிரத்து 600 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள், சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியத்தினை சார்ந்த தொழிலாளர்கள் ஆகியோர் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களை அறிந்து கொண்டு, அதன் மூலம் பயன்பெற்று, வாழ்வில் வளம் பெற வேண்டும் என்றார். 

    விழாவில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன்,   ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவர்  சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் மஞ்சுளா பாலசந்தர், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆரோக்கிய சாந்தாராணி, நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், காஞ்சி ரங்கால் ஊராட்சி மன்றத்த லைவர் மணிமுத்து, தொழி லாளர் நலத்துறை உதவி ஆணையர்கள் கோட்டீ ஸ்வரி, ராஜ்குமார், நகர்மன்ற உறுப்பினர் சரவணன், சிவகங்கை வட்டாட்சியர் தங்கமணி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×