என் மலர்
உள்ளூர் செய்திகள்

மண்டல தலைவர் மகேஸ்வரி தலைமையில் கூட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
டவுன் ரத வீதிகளில் நீர் தேக்க தொட்டி அமைக்க கவுன்சிலர்கள் கோரிக்கை
டவுன் ரத வீதிகளில் நீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என்று மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியின் நெல்லை மண்டல குழு கூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு மண்டல தலைவர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் பைஜு முன்னிலை வகித்தார்.
இதில் சர்தார்புரம் கீழத்தெருவில் கழிவு நீரோடையை சீர் செய்து அதன்மேல் கல்வெட்டு பாலம் அமைத்திட தீர்மானிக்கப்பட்டது. காந்திநகர் ரேஷன் கடை தெருவில் பொது அடிபம்பு பழுதடைந்துள்ளது. அதனை சீரமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
15-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட நதிபுரம் பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறைகளை சீரமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
18-வது வார்டுக்கு உட்பட்ட விசுவநாதன் நகர் பூங்கா அருகே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கவும், 23-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சீரான குடிநீர் வழங்க வேண்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டவுன் கீழரத வீதி, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி வைக்க கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வாகையடி முனை பகுதியில் சேதமடைந்த பாலத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிய பாலம் அமைக்கவும் கோரிக்கை வைத்தனர். இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






