search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசிய காட்சி.
    X
    கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசிய காட்சி.

    அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்கள் தங்கள் நலனை மட்டுமே சிந்தித்தார்கள்-அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டு

    தூத்துக்குடியில் நடைபெற்ற தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்கள் தங்கள் நலனை மட்டுமே சிந்தித்தார்கள் என அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டி உள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பேருந்துநிறுத்தம் அருகில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் நடைபெற்றது.

    பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், நிர்மல்ராஜ், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மேகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் அறநிலைத்துறை மூலம் ரூ.2500 கோடி மதிப்புள்ள கோவிலுக்கு சொந்தமான இடம் மீட்கப்பட்டுள்ளது. 81 கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.  வரும் ஆண்டில் ஆயிரம் கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டு குடமுழுக்கு பணிகளுக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பூசாரிகளுக்கு மாத ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

    சமூக நலத்துறை மூலம் காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். 
    தமிழகம் முழுவதும் குழந்தைகள் கணக்கெடுப்பின் மூலம் 10 லட்சம் குழந்தைகள் சத்துக்குறைவு உள்ளது என கண்டறியபட்டு அதற்கு தேவையான ஊட்டச்சத்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

    குழந்தை பருவம் தான் நல்ல ஆரோக்கியம், மூளை வளர்ச்சி, அறிவுத்திறன் பெறும் காலம் கர்ப்பினி பெண்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வேலை வாய்ப்பில் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் இங்கு வந்து தேர்வு எழுதி அரசு பணியில் சேர்வதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தமிழில் எழுத்து தேர்வு பெற்று வெற்றி பெற வேண்டும். தமிழர்களுக்கு மட்டும்  தான் இனி அரசு வேலை என்பதை முதல்-அமைச்சர் உறுதி செய்துள்ளார்.

    மாவட்டத்தில் 1100 ஏக்கரில் ரூ.1400 கோடி முதலீட்டில் பர்னிச்சர் பூங்கா அமைப்பதற்காக முதல்கட்ட பணியாக சாலை போடும் பணி நடைபெறுகிறது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற இடங்களிலிருந்து இங்கு தொழில் தொடங்க தயாராகி வருகின்றனர். இதன்மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் நம்வீட்டு பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 
    அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களுக்கு மாதந்தோறும் 600 முதல் 1200 வரை மிச்சப்படுகிறது. இதனால் பெண்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலையில் தற்போது அதன்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்படி நடைபெற்ற சம்பவங்களில் ஒன்று தான். விருதுநகர் சம்பவம் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் பெண்களுக்கு எல்லா தொலை தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டு குற்றங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. 

    இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாத எடப்பாடி பழனிசாமி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்கிறார். கடந்த 10 ஆண்டு காலம் அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக வளர்ச்சிக்கென்று எந்த திட்டங்களும் செயல்படுத்தாமல் அமைச்சர்களின் நலன் மட்டுமே முக்கியம் என்று பணியாற்றினார்கள் தி.மு.க. ஆட்சியில் ஓராண்டு சாதனை அனைவரும் வரவேற்கும் வகையில் உள்ளது.
    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநில பேச்சாளர்கள் இளங்கோவன், இருதயராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா உள்பட பலர் பேசினார்கள். 
    Next Story
    ×