search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுடன் தாசில்தார் மதுசூதனன்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுடன் தாசில்தார் மதுசூதனன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    தாமதமின்றி நிலப்பட்டா வழங்கக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்

    பாபநாசத்தில் அரையபுரம் தட்டுமால் படுகை கிராம விவசாயிகள் தாமதமின்றி நிலப்பட்டா வழங்கக்கோரி உண்ணாவிரதம்- தாசில்தார் பேச்சுவார்த்தையில் தீர்வு.
    பாபநாசம்:

    பாபநாசம் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அரையபுரம் தட்டுமால் படுகை விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தைபாபநாசம் மேலவீதி அண்ணா சிலை அருகில் நடத்தினர்.

    சங்க மாநில குழு உறுப்பினர் சாமு.தர்மராஜன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாரதி உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து பேசினார்.

     இப்போராட்டத்தில் விவசாய சங்க ஒன்றிய தலைவர் பொய்யாமொழி, ஒன்றிய செயலாளர் கனகராஜ், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தில்லைவனம், ராஜேந்திரன், பரமசிவம், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சேகர் மற்றும் பலர் பேசினர்.

    பாபநாசம் தாலுகா அரையபுரம் தட்டு–மால்படுகை கிராம விவசா–யிகளுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ரயத்து வாரியாக மாற்றம் செய்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு காலதாமதமின்றி நில பட்டா வழங்கிட வேண்டும். 

    பாபநாசம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசலாறு தென்கரையில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும். பாபநாசம் படுகை, சாலையை முனீஸ்வரன் கோவில் முதல் சுடுகாடு வரை தார் சாலையாக மாற்றிட கோரியும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    உடனே சம்பவ இடத்திற்கு பாபநாசம் தாசில்தார் மதுசூதனன் விரைந்து வந்து உண்ணாவிரத போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். வருகிற 11.6.2022 அன்று நில அளவை துறை மாவட்ட உதவி இயக்குனரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர். 

    பேச்சுவார்த்தையின் போது பாபநாசம் வருவாய் ஆய்வாளர் வரதராஜன், கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, தனிப்பிரிவு ஏட்டு சதீஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×