search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழாவில் மாணவர்களுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பட்டங்களை வழங்கினார்.
    X
    விழாவில் மாணவர்களுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பட்டங்களை வழங்கினார்.

    கொரோனா தடுப்பு பிரசாரங்களில் மருத்துவ மாணவர்களின் ஈடுபாடு பாராட்டுக்குரியது-தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலெக்டர் பேச்சு

    கொரோனா தடுப்பு பிரசாரங்களில் மருத்துவ மாணவர்களின் ஈடுபாடு பாராட்டுக்குரியது என தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதா வது:-

    தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இப்போது 1552 படுக்கை களுடன் தேவையான மருத்துவப் பொருட்கள் மற்றும் தேவையான ஒவ்வொரு திறமையையும் கற்று பயிற்சி செய்வதற்கான வழிகள் இருப்பதால், நிஜ உலகத்தை எதிர்கொள்ளும் போதுமான அறிவும், அனுபவமும் உங்கள் அனைவருக்கும் இருப்பதாக நான் நம்புகிறேன்.

    கொரோனா தடுப்பு பிரசாரங்களில் மருத்துவ மாணவர்களின் ஈடுபாடு பாராட்டுக்குரியது. மருத்துவ மாணவர் என்ற நிலையில் இருந்து மருத்துவராக இன்று மாறியுள்ளீர்கள். பெற்றோரின் கனவை நிறைவேற்றியுள்ளீர்கள். என்னுடைய பட்டமளிப்பு விழாவில் பேசியது எனக்கு நினைவில்லை.

    மருத்துவக்கல்லூரி முதல்வர் மிகச் சிறந்த பேச்சாளர் அவருடைய பேச்சை நான் ரசிப்பேன். நீங்கள் எங்கு உட்காருகிறீர்கள் என்பது முக்கியமல்ல. எதனை அடைகிறீர்கள் என்பது தான் முக்கியம்.  கொரோனா வால் 3 ஆண்டுகள் கழித்து  இந்த விழா சிறப்பாக நடைபெறுகிறது. நீங்கள் கஷ்டமான காலத்தில் படித்துள்ளீர்கள்.

    உங்கள் வாழ்க்கை, எதிர்காலம் சிறந்ததாக அமையும். கொரோனா காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது. அதற்கு முக்கிய காரணம் மாணவர்கள்தான். டாக்டர் ஆவது மிகப்பெரிய கனவாக உள்ளது. நிறைய பள்ளிகளில் குழந்தைகளை கேட்டால் டாக்டர் ஆக வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள்.

    சிறு, சிறு தவறுகள் நடந்தா லும் கல்லூரி முதல்வர் மன்னித்து விடுவார். அனைவரும் வெவ்வேறு இடத்திற்கு போகப் போகிறீர்கள். போட்டி நிறைந்த உலகமாக உள்ளது. உங்களுடைய கைகள் ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்ட கைகள் என்று முதல்வர் கூறினார். அது உண்மையும் கூட.

    உலகம் முழுவதும் மருத்துவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். உங்களுக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களே உங்களது பெற்றோருக்கு இணையாக வைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

    நீங்கள் இங்கிருந்து சென்று பெரிய மருத்துவர்களாகி மீண்டும் இந்த கல்லூரிக்கு வந்து பெருமைகள் சேர்க்க வேண்டும். உங்களுக்கும், உங்களுடைய பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு, துணை முதல்வர் கலைவாணி, கண்காணிப்பாளர் சைலேஸ், மருத்துவ அலுவலர் குமரன், குமாரசாமி, பேராசிரியர்கள், மருத்துவர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×