என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
கடலூரில் புதிய பஸ் நிலைய இடத்தை மாற்றுவதை கண்டித்து அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
கடலூரில் புதிய பஸ் நிலைய இடத்தை மாற்றுவதை கண்டித்து அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் கடலூரில் புதிதாக அமைய உள்ள பஸ் நிலையத்தை குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு மாற்றுவது கண்டித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஆனந்தன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் கழக துணை பொது செயலாளர்கள் செந்தமிழன், ரங்கசாமி, மாவட்ட செயலாளர்கள் பாலசுந்தரம், அக்ரி முருகேசன் , மோகன், அய்யனார், ஞானமூர்த்தி, கோமுகி மணியன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்கள்.
Next Story