search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் ஆர்த்தி இருளர் இன குடியிருப்பிற்கு சென்று குழந்தையின் ஆரோக்கியத்தை ஆய்வு செய்தார்
    X
    கலெக்டர் ஆர்த்தி இருளர் இன குடியிருப்பிற்கு சென்று குழந்தையின் ஆரோக்கியத்தை ஆய்வு செய்தார்

    இருளர் இன குடியிருப்பில் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து கலெக்டர் ஆய்வு

    ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் எவரும் விடுபடாமல் பரிசோதனை முகாமில் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்யுமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் ஆர்த்தி அறிவுறுத்தினார்.
    காஞ்சிபுரம்:

    உத்திரமேரூர் வட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து ஆேலாசனை முகாம் அம்மையப்ப நல்லூர் மற்றும் மேல்துளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த முகாமில் 140 குழந்தைகளுக்கு எடை மற்றும் உயரம் அளவீடு செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    பின்னர் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கு வளர்ச்சி கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டு, குழந்தையின் ஊட்டச்சத்து வளர்ச்சி மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு சத்துமாவு, கொழுக்கட்டை மற்றும் வேர்க்கடலை பர்பி வழங்கப்பட்டது.

    ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் எவரும் விடுபடாமல் பரிசோதனை முகாமில் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்யுமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் ஆர்த்தி அறிவுறுத்தினார்.

    பின்னர் கலெக்டர் ஆர்த்தி அப்பகுதியில் உள்ள இருளர் இன குடியிருப்புக்கு சென்று அங்குள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) பிரியா ராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் கிருஷ்ணவேணி கலந்து கொண்டனர்.

    Next Story
    ×