என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
தென்காசி அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத்தேர்வு
Byமாலை மலர்26 May 2022 12:44 PM IST (Updated: 26 May 2022 12:44 PM IST)
தென்காசி அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத்தேர்வு நடைபெற்றது.
தென்காசி:
தென்காசி அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னையில் செயல்பட்டு வரும் பெஸ்டன் என்ஜினீயர்ஸ் அண்ட் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் எலெக்ட்ரிக்கல் மற்றும் சிவில் துறையில் இறுதியாண்டு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு வளாகத்தேர்வு நடைபெற்றது.
நிறுவனத்தின் சார்பில் வேலவன் மற்றும் குமரகுரு ஆகியோர் கலந்து கொண்டு நேர்முக தேர்வுகளை நடத்தினர். முன்னதாக, பெஸ்டன் நிறுவனத்தில் பணியில் சேரும் மாணவர்களின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தில் பெஸ்டன் நிறுவனத்தின் பங்களிப்பு பற்றி நிறுவனத்தின் வேலவன் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
வளாகத்தேர்வில் செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியிலிருந்து 4 பேர், இதர 10 பாலிடெக்னிக் கல்லூரிகளிலிருந்து 82 மாணவ-மாணவிகளும் மற்றும் 2 பொறியியல் கல்லூரிகளிலிருந்து 4 பேரும் கலந்து கொண்டனர்.
தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி தாளாளர் டாக்டர் புதிய பாஸ்கர், நிர்வாக இயக்குனர் கல்யாணி, கல்லூரி முதல்வர் சேவியர் இருதயராஜ், நிர்வாக அதிகாரி மணிகண்டன் மற்றும் அனைத்து துறை தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு அதிகாரிகள் ஆறுமுகம் மற்றும் சிவா ஆகியோர் செய்திருந்தனர். எலெக்ட்ரிக்கல் துறையில் இறுதியாண்டு பயிலும் மாணவர் மொஹம்மதுகனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதே துறையை சேர்ந்த மாணவர் செய்யதுமசூது வரவேற்றார்.
Next Story
×
X