search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்
    X
    ரெயில்

    செக்கானூரணியில் ரெயில் நிற்காததால் பொதுமக்கள் ஏமாற்றம்

    செக்கானூரணியில் ரெயில் நிற்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    திருமங்கலம்

    மதுரை-போடி இடையே ரூ.450 கோடியில் அகல ரெயில்பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் நடைபெற்று வருகிறது.முதலாவதாக பணிகள் நிறைவடைந்த மதுரை-உசிலம்பட்டி இடையேயும், 2-வதாக மதுரை-ஆண்டிபட்டி இடையேயும், 3-வதாக மதுரை-தேனி இடையேயும் ெரயிலை அதிவேகத்தில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து இன்று (26-ந் தேதி) மதுரை-தேனி இடையே தினசரி விரைவு ரெயில் இயக்க ப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த மீட்டர்கேஜ் ரெயில்பாதையில் இங்கு ரெயில்கள் இயக்கப்பட்ட போது திருமங்கலம் தொகுதியில் உள்ள செக்கானூரணியில் இருந்த ரெயில் நிலையத்தில் மதுரை-போடி பாசஞ்சர் ரெயில் வழக்கமாக நின்று சென்றது. 

    தற்போது மதுரை-தேனி வரை ரெயில்பாதை பணிகள் முழுமையாக முடிந்து இன்று முதல் விரைவு ரெயில் இயக்கப்பட உள்ள நிலையில் செக்கானூரணி பகுதியில் ரெயில் நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால் செக்கானூரணி மற்றும் 25க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமக்கள் ெரயிலில் பயணிக்க மதுரை அல்லது உசிலம்பட்டிக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    எனவே மீட்டர் கேஜில் ரெயில்கள் இயக்கப்பட்டபோது செயல்பட்டு வந்த செக்கானூரணி  ரெயில் நிலையத்தை மீண்டும் அதே இடத்தில் அமைக்க வேண்டும் என்றும், அதற்கு விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர்முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும்  செக்கானூரணி பகுதி பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்தனர். 

    அதிகளவு பயணிகள் பயன்படுத்திய  செக்கா னூரணி ரெயில் நிலையத்தை மீண்டும் அதே இடத்தில் அமைக்க தெற்கு ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 
    Next Story
    ×