என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    மெக்கானிக் தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    பள்ளிப்பாளையம்

    பள்ளிப்பாளையம் காவிரி ஆர்.எஸ். புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 39). ஈரோட்டில் இருசக்கர வாகன மெக்கானிக் கடை வைத்திருந்தார். 

    இவருடைய மனைவி மேகலா (35). இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர். இதில் ஒரு மகன் இறந்து விட்டான். இதனால் நடராஜன் மன வேதனையில் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் நடராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரோட்டில் உள்ள மெக்கானிக் கடையை காலி செய்து விட்டதாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் மது குடித்து வந்தார். இதற்கிடையே கடந்த 17-ந் தேதி மேகலா வேலை விஷயமாக ஈரோடுக்கு சென்று விட்டார். 

    அப்போது வீட்டில் இருந்த நடராஜன் விஷம் குடித்து விட்டார். இதையடுத்து  அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். 

    அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் இறந்தார். இதுகுறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×