என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
தாழையூத்து அருகே பெண்ணை தாக்கிய கணவர் கைது
தாழையூத்து அருகே பெண்ணை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:
நெல்லையை சந்திப்பு சி.என். கிராமத்தை சேர்ந்தவர் உடையார் (வயது 40). இவரது மனைவி சுப்புலட்சுமி.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சுப்புலட்சுமி நெல்லையை அடுத்த மேல தாழையூத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று உடையார் சி.என். கிராமத்தை சேர்ந்த நாகராஜன் (25) என்பவரை அழைத்துக்கொண்டு மனைவி வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு சுப்புலட்சுமியையும் அவரது குடும்பத்தினரையும் அவதூறாக பேசி வீட்டின் கதவு உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சுப்புலட்சுமி தாழையூத்து போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து உடையார் மற்றும் நாகராஜனை கைது செய்தனர்.

Next Story