என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
  X
  மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

  சென்னை வரும் பிரதமர் மோடிக்கு சென்னை மேற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் சிறப்பான வரவேற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை வரும் பிரதமர் மோடிக்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை அழைத்து சென்று மான் ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், நாதஸ்வரம் என கிராமிய கலைகளுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  அம்பத்தூர்:

  பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வருகிற 26-ந்தேதி சென்னை வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் மாதவரம், அம்பத்தூர், மதுரவாயல் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒவ்வொரு மண்டலத்திலும் தனித்தனியாக நடை பெற்றது. கூட்டத்தில் சென்னை வரும் பிரதமர் மோடிக்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை அழைத்து சென்று மான் ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், நாதஸ்வரம் என கிராமிய கலைகளுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாதவரம் பொறுப்பாளர் சுஜாதா ஜீவன், அம்பத்தூர் பொறுப்பாளர் தியாகராஜன், மதுரவாயல் பொறுப்பாளர் சுப்பிரமணிய ரெட்டியார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×