என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின் கம்பியில் விழுந்த மரத்தை ஊழியர்கள் அகற்றிய போது எடுத்த படம்.
நெல்லை அருகே மின்கம்பியில் விழுந்த பனை மரம் அகற்றம்
நெல்லை அருகே மின் கம்பியில் விழுந்த பனை மரத்தை உடனடியாக வெட்டி அகற்றப்பட்டது. பின்னர் மின் விநியோகம் வழங்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் துணை மின் நிலையம் உள்ளது. இதற்கு பழைய பேட்டை உப மின் நிலையத்தில் இருந்து வரும் உயரழுத்த மின் பாதையில் கண்டியபேரி அருகே பனை மரம் விழுந்து மின் தடை ஏற்பட்டது.
இதனால் மின்வாரிய அதிகாரிகள் உத்தரவின்பேரில் மாற்று வழியாக தாழையூத்து உப மின் நிலையத்தில் இருந்து மின் இணைப்பு வழங்கப்பட்டு பொது மக்கள் பாதிக்காமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பின்பு தீயணைப்புத்துறை மேற்பார்வையில் அந்த பனை மரம் அகற்றப்பட்டு மறுபடியும் பழைய பேட்டை உப மின் நிலையத்தில் இருந்து மின் இணைப்பு வழங்கப்பட்டது.

Next Story