search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் சக்கரபாணி
    X
    அமைச்சர் சக்கரபாணி

    நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடுகளை தடுக்க புகார் பெட்டிகள்- அமைச்சர் சக்கரபாணி பேட்டி

    விவசாயிகள் தாங்கள் நெல்லை,விற்கின்றனர். நேரடி தி.மு.க., உற்பத்தி செய்த கொள்முதல் நிலையங்களில்ஆட்சிக்கு வந்த பின், ‘ஆன்லைன்’ வழியாக, நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

    சிதம்பரம்:

    தமிழக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி சிதம்பரம் அருகே மணலூரில் உள்ள தமிழ்நாடு உணவு வாணிப கழக குடோனில் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    தமிழக அரசின் ரேஷன் உணவு பொருட்கள் கடத்துவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பொறுப்பேற்ற பின்பு சிவில் சப்ளை பிரிவில் தற்போது 4 சூப்பிரண்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 286 குடோன்களை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேல்கூரை, தரை, ஓய்வு அறைகள் கட்ட ரூ. 90 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 150 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சொந்த கட்டடிம் கட்டவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் வழங்கப்படும். இதுவரை, 2 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன. இறந்த 12 லட்சம்பேரின் பெயர்கள், ரேஷன் அட்டையில் இருந்துநீக்கப்பட்டுள்ளன.போலி ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டததால், அரசின் நிதி சேமிக்கப்பட்டுள்ளது

    தமிழகத்தில், 2021 அக்டோபர் 1 முதல், இம்மாதம் 20ம் தேதி வரை, 353 கோடி கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு 7,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

    விவசாயிகள் தாங்கள் நெல்லை,விற்கின்றனர். நேரடி தி.மு.க., உற்பத்தி செய்த கொள்முதல் நிலையங்களில்ஆட்சிக்கு வந்த பின், ‘ஆன்லைன்’ வழியாக, நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இங்குள்ள பட்டியல் எழுத்தர்கள், விவசாயிகளுக்கு ‘டோக்கன்’ அளிக்கின்றனர். அதில்,நாள்,தேதி, எந்த நேரத்திற்கு விவசாயிகள் வர வேண்டும் என்பது இருக்கும்.

    அந்த நேரத்தில் விவசாயிகள் வருகின்றனர்.நெல் வாங்கியதும், எந்தெந்த விவசாயிகளுக்கு பணம் தர வேண்டும் என, மண்டல மேலாளர், தலைமை அலுவலகத்திற்கு தெரிவித்தால், 2 நாட்களில் பணம் வழங்கப்படுகிறது. சில கொள்முதல் நிலையங்களில், லஞ்சம் பெறுவதாக தகவல் வருகிறது. இதை கட்டுப்படுத்த, அனைத்து நேரடி கொள்முதல் நிலையங்களிலும், புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. புகார் பெட்டியில் உள்ள மனுக்கள் மீது, கலெக்டர் நடவடிக்கை எடுப்பார்.

    இல்லையெனில், உணவுத்துறை செயலர் அல்லது மேலாண் இயக்கு னருக்கு அனுப்பினால், அவர்கள் நடவடிக்கை எடுப்பர். நேரடி கொள்முதல் நிலையங்களில் தவறுசெய்த, 150க்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துவரம் பருப்பு, சர்க்கரை பாக்கெட்டில் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×