search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடிகால் வாய்க்கால் கட்டும் பணியினை மாவட்ட கலெக்டர்  பார்வையிட்டார்
    X
    வடிகால் வாய்க்கால் கட்டும் பணியினை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்

    புவனகிரி பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி- கலெக்டர் நேரில் ஆய்வு

    சாத்தப்பாடியில் தாழ்வான பாலம் உள்ளது. மழைகாலங்களில் இந்த பாலத்தை பஸ்கள் ஏதும் கடந்து செல்ல முடியாது.

    புவனகிரி:

    புவனகிரி குறிஞ்சிப்பாடி செல்லும் சாலையில் அப்பகுதியில் உள்ள மழை காலங்களில் வீடுகளை சுற்றி நீர் தேங்கி உள்ளது. இதனை தவிர்ப்பதற்காக ரூ. 85 லட்சம் செலவில் வடிகால் கட்டும் பணியை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் அங்குள்ள அதிகாரிகளிடம் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என உத்தர விட்டார்.

    இதேபோல் மேலமணக்குடி செல்லும் நெடுஞ்சாலை வளைவில் அதிகளவு விபத்துகள் நடைபெற்று வருகிறது இதனை தவிர்க்க சுமார் ரூ.1 கோடி மதிப்பில் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதையும் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு கலெக்டர் பல்வேறு அறிவுரைகளை கூறினார்.

    சாத்தப்பாடியில் தாழ்வான பாலம் உள்ளது. மழைகாலங்களில் இந்த பாலத்தை பஸ்கள் ஏதும் கடந்து செல்ல முடியாது. இதனை பல்வேறு அதிகாரிகளுக்கும் அரசுக்கும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் அதன் அடிப்படையில் ரூ.3 கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணி 3ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடை பெற்று வருகிறது.

    இதனை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் அதிகாரிகளுக்கு மழை காலத்தில் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அவருடன் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பரந்தாமன், உதவி கோட்ட பொறியாளர் பரமேஸ்வரி, உதவி பொறியாளர் ஜெகன் மற்றும் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×