search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
    X
    தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

    பல்லடம் மின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம்

    விவசாய மின் இணைப்பு விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் அளித்த உறுதி மொழியை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர்.
    பல்லடம்:

    பல்லடம் மின் கோட்டத்தை சேர்ந்த சாலைப்புதூர் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட ஜெ.கிருஷ்ணபுரம் பகுதியில், விவசாய மின் இணைப்பு கேட்டு பல ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்து இருந்தனர்.

    தற்போது அரசு அறிவிப்பின்படி தங்களுக்கு விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் வழக்கறிஞர் ஈசன், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மந்தராசலம் தலைமையில்,  பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் பல்லடம் மின் வாரியகோட்ட செயற்பொறியாளர் ரத்தினகுமார், உதவி செயற்பொறியாளர் இளங்கோ, உதவி பொறியாளர்(பொறுப்பு) சிவராமன், பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    விவசாய மின் இணைப்பு விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் அளித்த உறுதி மொழியை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர். 

    பின்னர் பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளர் ரத்தினகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    பல்லடம் மின் கோட்டத்தில் 1.4.2003 முதல் 31.3.2013 வரையில் 1876 பேர் விவசாய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். அதில் பல்லடம் நகர பிரிவில் 117 விவசாய மின் இணைப்புகளும், பல்லடம் கிராமிய பிரிவில் 526 விவசாய மின் இணைப்புகளும், கரடிவாவி பிரிவில் 179 விவசாய மின் இணைப்புகளும், பொங்கலூர் பிரிவில் 203 விவசாய மின் இணை்ப்புகளும் ஆக மொத்தம் 1025 விவசாய மின் இணைப்புகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

    மீதமுள்ள மின் இணைப்புகள் பயனாளிகள் ஆவணங்கள் சமர்ப்பிக்காதது, தொழில்நுட்பக் கோளாறு, மழை பெய்தது போன்ற காரணங்களால் காலதாமதம் ஆகி வருகிறது. இருப்பினும் விவசாய மின் இணைப்பு விரைவாக வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க–ப்பட்டு வருகிறது இவ்வாறு அவர்தெரிவித்தார்.
    Next Story
    ×