என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  எப்.எக்ஸ். கல்லூரியில் சுத்தப்படுத்தும் பணி நடந்த காட்சி.
  X
  எப்.எக்ஸ். கல்லூரியில் சுத்தப்படுத்தும் பணி நடந்த காட்சி.

  நெல்லை மாவட்டத்தில் நாளை 113 மையங்களில் குரூப்-2 தேர்வு 30,291 பேர் எழுதுகின்றனர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லை மாவட்டத்தில் நாளை 113 மையங்களில் குரூப்-2 தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை 30,291 பேர் எழுத உள்ளனர்
  நெல்லை:

   தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (முதல்நிலைத் தேர்வு) குரூப்-2 தேர்வு நாளை (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் நடக்கிறது.

   நெல்லை மாவட்டத்தில்  குரூப்-2 தேர்வை 30 ஆயிரத்து 291 பேர் எழுதுகின்றனர். இதற்காக நெல்லை  வட்டத்தில் 29 இடங்கள், பாளை வட்டத்தில் 47 இடங்கள், சேரன்மகாதேவி வட்டத்தில் 8 இடங்கள், அம்பை வட்டத்தில் 13 இடங்கள் என 97 இடங்களில் 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

  தேர்வு எழுதுபவர்களை கண்காணிக்க 113 ஆய்வுக்குழு அலுவலர்கள், 13 பறக்கும்படை அலுவலர்கள் தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் நிலையில் 27 சுற்றுக்குழு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  மேலும் தேர்வின் நடவடிக்கைகளை பதிவு செய்திடும் வகையில் 117 வீடியோ கிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  தேர்வையொட்டி மாநகராட்சி சார்பில் இன்று தேர்வு மையங்களில் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரியில் 3 மையங்களில் நாளை தேர்வு நடைபெறுகிறது.

  இதைத்தொடர்ந்து தச்சநல்லூர் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தூய்மை பணியாளர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

  குரூப்-2 தேர்வை முன்னிட்டு முதன்மை கண்காணிப்பா ளர்களுக்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆயத்த கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

  தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப்-2 தேர்வை எழுதுவதற்காக  தூத்துக்குடியில் 51, கோவில்பட்டியில் 32, ஸ்ரீவைகுண்டத்தில் 6 மற்றும் திருச்செந்தூரில் 16 என 4 வட்டங்களில் மொத்தம் 105 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

  தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 30 ஆயிரத்து 784 பேர் குரூப்-2 தேர்வை எழுதுகின்றனர்.இதற்காக 22 கண்காணிப்பு குழுக்களும், கண்காணிப்பு பணிக்காக சப்-கலெக்டர் நிலையில் 12 பறக்கும்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

  குரூப்-2 தேர்வை முன்னிட்டு தேர்வு மையத்திற்குள் செல்போன்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.
  Next Story
  ×