என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  களக்காடு அருகே அரிவாளை காட்டி மிரட்டி விவசாயியிடம் பணம் பறிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  களக்காடு அருகே அரிவாளை காட்டி மிரட்டி விவசாயியிடம் பணம் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது.
  களக்காடு:

  களக்காடு புதுத்தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை (59), விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது சைக்கிளில் வளைக்காரன்குளத்திற்கு சென்று விட்டு, களக்காட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

  ஜெ.ஜெ.நகர் விலக்கு அருகே வந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த நடராஜன் மகன் மகாராஜன் அவரை வழிமறித்து செலவுக்கு ரூ.500 தருமாறு கேட்டார். அதற்கு செல்லத்துரை மறுத்தார்.

  இதனைத்தொடர்ந்து மகாராஜன் தான் வைத்திருந்த அரிவாளை எடுத்து காட்டி, பணம் தராவிட்டால் தலையை துண்டித்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

  இதனால் பயந்து போன செல்லத்துரை சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.120-ஐ எடுத்துக் கொடுத்தார். அதனை வாங்கி கொண்ட மகாராஜன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.  

  இதுபற்றி செல்லத்துரை களக்காடு போலீசில் புகார் செய்தார்.

  சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் இதுதொடர்பாக மகாராஜன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×