search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலமைச்சர்.
    X
    முதலமைச்சர்.

    திருப்பூர் மீது தமிழக முதலமைச்சர் நேரடி கவனம் செலுத்த வேண்டும் - தொழில்துறையினர் கோரிக்கை

    பஞ்சு மற்றும் நுால் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதிக்கவேண்டும்.

    திருப்பூர்:

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவையில் நேற்று, தொழில் துறையினரை சந்தித்து கலந்துரையாடினார். இதில், திருப்பூர் பின்னலாடை தொழில் அமைப்பினர் பங்கேற்று, பஞ்சு, நுால் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல்:-

    இந்திய பருத்தி கழகம் போன்று, தமிழக பருத்தி கழகம் அமைக்க வேண்டும். இந்த கழகம் மூலம் பஞ்சு கொள்முதல் செய்யப்பட்டு, நுாற்பாலைகளுக்கு சீரான விலைக்கு வழங்க வேண்டும். யூக வணிகத்திலிருந்து பஞ்சை நீக்குவது; பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்கவேண்டும் என மத்திய ஜவுளி அமைச்சருக்கு கடிதம் எழுதிய, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம்:-

    பஞ்சு மற்றும் நுால் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதிக்கவேண்டும். திருப்பூர் மீது முதல்வர் நேரடியாக, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

    உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி அனைத்து–வகையிலும் தன்னிறைவு பெற்ற நகராக மாற்றிக்காட்ட வேண்டும். தொழிலாளர் வசதிக்காக குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். பின்னலாடை துறைக்கான ஆய்வு மையம் அமைக்க வேண்டும்.’

    சைமா’ நிர்வாகிகள்:-

    பத்துக்கும் மேற்பட்ட ஜாப்ஒர்க் நிறுவனங்களுக்கு அனுப்பியே திருப்பூரில் ஆடை தயாரிப்பு பூர்த்தி செய்யப்படுகிறது.

    தையல் மெஷின் இல்லாவிட்டாலும், ஆடை தயாரிப்பு சார்ந்த பணிகள் நடைபெறுவதால், ஜாப்ஒர்க் நிறுவனங்களும், தொழிற்சாலை பயன்பாட்டு பிரிவில் மின் கட்டணம் செலுத்த அனுமதிக்கவேண்டும்.’சி-பார்ம்’ சமர்ப்பிக்காத, ஒரு சதவீதம் மட்டும் வரி செலுத்தியவர்களுக்கு வணிக வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்புகின்றனர். இப்பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும்.

    சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன்:-

    திருப்பூரில் சாயக்கழிவுநீரை ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்கும், 18 பொது சுத்திகரிப்பு மையங்கள் இயங்குகின்றன. கடந்த 2010ல் சாய ஆலை மூடப்பட்டபோது, சுத்திகரிப்பு மைய மேம்பாட்டுக்காக, தமிழக அரசு 200 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கியது; இந்த தொகையை, மானியமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு, திருப்பூர் தொழில் அமைப்பினர் முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    Next Story
    ×