என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மதுரை தமுக்கம் மைதானம் அருகே மாவட்டத்தலைவர் கார்த்திகேயன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர்.
  X
  மதுரை தமுக்கம் மைதானம் அருகே மாவட்டத்தலைவர் கார்த்திகேயன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர்.

  மதுரையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பேரறிவாளன் விடுதலையை கண்டித்து மதுரையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  மதுரை

  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு ஆயுள்தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

  இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது, காங்கிரசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  இந்த நிலையில் ‘ராஜீவ் காந்தி கொலையில் தொடர்பு உடைய பேரறிவாளன் விடுதலையை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி ஏற்கனவே அறிவித்து இருந்தார். 

  அதன்படி மதுரை தல்லாகுளம் நேரு சிலை அருகே மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேரறிவா ளன் விடுதலையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.  அப்போது கட்சி நிர்வாகிகள் வாயில் வெள்ளை துணியை கட்டி இருந்தனர்.

  மதுரை தமுக்கம் நேரு சிலை முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
  இதேபோல் மதுரை ஜான்சிராணி பூங்கா அருகிலும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  Next Story
  ×