என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  கிருஷ்ணகிரியில் மாரியம்மன் கோவில் திருவிழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிருஷ்ணகிரியில் மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
  கிருஷ்ணகிரி, 

  கிருஷ்ணகிரி புது ப்பேட்டை சின்னமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வரசித்தி விநாயகர், சின்னமாரியம்மன் கோவிலில் 25ம் ஆண்டு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 16ந் தேதி தொடங்கியது. 

  அன்று காலை வரசித்தி விநாயகருக்கும், சின்னமாரியம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை, தீர்த்தப் பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டன. மாலையில் சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. 17ந் தேதி மஹா தீபாராதனை,அபிஷேகம், தீர்த்தப் பிரசாதம், கஞ்சி ஊற்றும் அழைப்பு ஊர்வலம் ஆகியவை நடந்தது. 

  நேற்று காலை, 9 மணிக்கு புஷ்ப பல்லக்கில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வரசித்தி விநாயகர், சின்னமாரியம்மன் சுவாமிகள், பெங்களூரு சாலை, லட்சுமணன் தெரு, திருவண்ணாமலை சாலை, சேலம் சாலை, தம்மண்ணன் நகர் மற்றும் சென்னை சாலை வழியாக நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர், இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
  Next Story
  ×