search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    குளச்சல் அருகே பாலியல் புகார்களில் 2 மாணவர்கள் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குளச்சல் அருகே பாலியல் புகார் தொடர்பாக 2 மாணவர்கள் மீது போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    குளச்சல்:

    குளச்சல் அருகே உள்ள வாணியக்குடியை சேர்ந்த 16 வயது சிறுமி, பெற்றோர் பிரிந்ததால் உறவினர் வீட்டில் தங்கி 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அந்த வீட்டில் அவருக்கு சகோதரர் முறை உறவான கல்லூரி மாணவர் சஜின் ரோஜர் (வயது 21) என்பவர் இருந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த சஜின் ரோஜர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சிறுமி கடந்த மாதம் 29ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றார்.

    உறவினர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினர். சம்பவம் குறித்து சிறுமி குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். அப்போது உறவினர்கள் ஜாக்குலின், சுபி ஆகியோர் கொடுமைப்படுத்தியதாகவும் புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

    இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சங்கீதா அன்பு ஜூலியட் வழக்குப்பதிவு செய்து போக்சோ பிரிவில் சஜின் ரோஜரை கைது செய்தார். ஜாக்குலின், சுபி ஆகியோர் மீது சிறுமியை கொடுமைபடுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மற்றொரு சம்பவம்...

    திங்கள்நகர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் 2வது பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்து உள்ளார். அந்த பெண்ணின் இரண்டரை வயது ஆண் குழந்தையை கடந்த மாதம் 3ம் தேதி பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவர் தூக்கிச்சென்று விளையாடி உள்ளார். மறுநாளும் குழந்தையை எடுத்து விளையாடி விட்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் தாயிடம் திரும்ப கொடுத்தாராம். அப்போது குழந்தை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து குழந்தையின் தாய் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சங்கீதா அன்பு ஜூலியட் விசாரணை நடத்தி பிளஸ் 1 மாணவர் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.


    Next Story
    ×