search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    5 நகராட்சிகளுக்கான புதிய குடிநீர் திட்டம் தயாரிப்பு பணி தீவிரம்

    5 நகராட்சிகள் மற்றும் 7 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1,317 குக்கிராம மக்கள் பயன்பெறும் வகையில் புதிய குடிநீர் திட்டம் தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 7 பேரூராட்சிகள், 547 வழியோர ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில் ரூ.224 கோடி மதிப்பில் திட்டப்பணிகளை முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்தநிலையில் உடுமலை நகராட்சி தவிர தாராபுரம், காங்கயம், பல்லடம், திருமுருகன்பூண்டி, வெள்ளகோவில் ஆகிய 5 நகராட்சிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் எடுக்கும் புதிய திட்டத்தை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தயார்படுத்தி வருகிறார்கள். 

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 5 நகராட்சிகள் மற்றும் 7 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1,317 குக்கிராம மக்கள் பயன்பெறும் வகையில் புதிய குடிநீர் திட்டம் தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி அணைக்கட்டு பகுதி–யில் இருந்து தண்ணீர் எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

    சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 8 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தினமும் 74.6 எம்.எல்.டி. தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு செய்து மக்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது என்று தெரிவித்தனர்.
    Next Story
    ×