என் மலர்
உள்ளூர் செய்திகள்

புகார்கள்
போலீஸ் நிலையங்களில் குவியும் புகார்கள்
விருதுநகரில் மாணவிகள், இளம்பெண்கள் மாயம் குறித்து போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்து வருகின்றன.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் நாள்தோறும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் மாயமாவது தொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஒரு நாளில் பெண்கள் மாயம் குறித்து குறைந்தது 10 வழக்குகளாவது பதிவாகி வருகின்றன. நேற்று விருதுநகர் மாவட்டத்தில் 3 பெண்கள் மாயம் குறித்து புகார்கள் வந்துள்ளன. அதன்விபரம் வருமாறு:-
சிவகாசி புதுத்தெருவைச்சேர்ந்த மாணவி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அந்த மாணவி பின்னர் வீடுதிரும்பவில்லை.
இதேபோல் சாத்தூர் இருக்கன்குடி சேர்ந்த மாணவி விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அவரும் சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இந்த 2 சம்பவம் தொடர்பாக சிவகாசி கிழக்கு இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் அந்த பகுதியில் உள்ள மொபைல் கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அந்த பெண்ணும் மாயமானார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கி ன்போது செல்போன் மூலமாக மாணவ, மாணவி களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்தன. இதன் காரணமாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு செ ல்போன் அத்தியாவசியமாக தேவைப்பட்டது. இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு செல்போனை வாங்கிக் கொடுத்தனர்.
ஆனால் அந்த செல்போன் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி அதன் மூலம் முகம் தெரியாத நபர்களுடன் பழகி காதல் வலையில் சிக்கி இளம் பெண்களும், கல்லூரி மாணவிகள் தங்கள் வாழ்க்கையை தொலைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
விருதுநகரில் தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் மாயமானது தொடர்பாக போலீசார் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story






