search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழையால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதையும், உப்பு அம்பாரத்தை தார்பாய் கொண்டு தொழிலாளிகள்
    X
    மழையால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதையும், உப்பு அம்பாரத்தை தார்பாய் கொண்டு தொழிலாளிகள்

    மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு

    வேதாரண்யத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவக்கத்தில் இருந்து விட்டு விட்டு மழை பெய்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்புஉற்பத்தி நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவக்கத்தில் இருந்து விட்டு விட்டு மழை பெய்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
    இந்நிலையில் கத்திரி வெயில் தாக்கத்தால் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்தது. 

    ஆனால் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக வேதாரண்யம் பகுதியில் நேற்று அதிகாலை பரவலாக மழை பெய்தது. இதனால் உப்பள பகுதிகளில் மழை நீர் தேங்கி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாத்திகளில் உள்ள உப்பை சேகரித்து தார்பாய்களை கொண்டு மூடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

     மீண்டும் உற்பத்தி துவங்குவதற்கு ஒரு வார காலம் ஆகும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×