என் மலர்
உள்ளூர் செய்திகள்

தடுப்பூசி
மெகா தடுப்பூசி முகாம்கள்
சிவகங்கை மாவட்டத்தில் 3 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நாளை நடக்கிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்ப தாவது:-
முதல்-அமைச்சர் உத்தரவின்படி ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைத்து அனைத்து மாவட்டங்களிலும் நடத்த அறிவுறுத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் நாளை (8-ந்தேதி) 2,950 இடங்களில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் காலை 7மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் இந்த முகாம்கள் போலியோ சொட்டு மருந்து முகாம் வழக்கமாக நடைபெறும் அனைத்து இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. இதில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் ஆகிய இடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் ஆகிய இடங்களிலும் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2-ம் தவணை செலுத்த வேண்டிய நபர்கள் உள்ள கிராமங்களில் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 16.1.2021 முதல் 4.5.2022 வரை மொத்தம் 20 லட்சத்து 30 ஆயிரத்து 517 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசிகள் 10 லட்சத்து 88 ஆயிரத்து 78 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட வயதினருக்கு 54 ஆயிரத்து 383 பேருக்கு முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 12 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட வயதி னருக்கு 38 ஆயிரத்து 915 பேருக்கு கோர்பிவேக்ஸ் முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 2-ம் தவணை தடுப்பூசிகள் 9 லட்சத்து 31 ஆயிரத்து 475 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட வயதின ருக்கு 2-ம் தவணை தடுப்பூசிகள் 47,067 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பூசி 10.1.2022 முதல் 10 ஆயிரத்து 966பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி கொள்ள ஏதுவாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையான ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் முதலியவற்றுடன் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






