என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
கடலூர் அருகே கணவன் கண்முன்னே மனைவி தீக்குளித்து பலி
Byமாலை மலர்5 May 2022 5:47 PM IST (Updated: 5 May 2022 5:47 PM IST)
கடலூர் அருகே கணவன் கண்முன்னே மனைவி தீக்குளித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
கடலூர்:
கடலூர் அடுத்த திருபபணாம்பாக்கம் சேர்ந்தவர் தயாளன். சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி சுதா (வயது 45). சுதாவிற்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தக்காரணத்தினால் புதுவை மாநிலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று தயாளன் தனது மனைவி சுதாவிடம் உணவு கேட்டுள்ளார். அப்போது சுதா எனக்கு உடல்நிலை சரியில்லை என கூறினார்.
இதனைத்தொடர்ந்து தயாளன் தனது மகள் ஆர்த்தியிடம் உணவு கேட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென்று சுதா வீட்டில் இருந்த மற்றொரு அறைக்கு சென்று மண்ணெண்ணெய் தன் மீது ஊற்றி திடீரென்று தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்த கணவர் மற்ற அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து சுதாவை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சுதா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×