என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    குளத்தில் பிணமாக கிடந்த பெண்- கற்பழித்து கொலையா? என போலீசார் விசாரணை

    பண்ருட்டியில் குளம் ஒன்றில் பிணமாக கிடந்த பெண் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி டைவர்ஷன் சாலை மார்க்கெட்டிங் கமிட்டி எதிரில் உள்ள திருமண மண்டபம் அருகில் குளம் ஒன்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இன்று அதிகாலை பிணமாக கிடந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பிணத்தின் அருகில் கிடந்த செல்போன், நாப்கின்பேடு, உள்ளாடை துணிகள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

    பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பிணமாக கிடந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார்? எப்படி இறந்தார்? கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு சிறிது நேரம் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


    Next Story
    ×