என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மின்வெட்டு ஏற்பட்டதை கண்டித்து ராணிப்பேட்டை நவல்பூர் எம்.பி.டி. சாலையில் அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்ட காட்
  X
  மின்வெட்டு ஏற்பட்டதை கண்டித்து ராணிப்பேட்டை நவல்பூர் எம்.பி.டி. சாலையில் அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்ட காட்

  அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்த போது திடீர் மின்வெட்டு- முன்னாள் அமைச்சர் சாலையில் அமர்ந்து மறியல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொதுக்கூட்டத்தின்போது மின்வெட்டு ஏற்பட்டதை கண்டித்து ராணிப்பேட்டை நவல்பூர் எம்.பி.டி. சாலையில் அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.
  ராணிப்பேட்டை:

  ராணிப்பேட்டை நவல்பூர் பஸ் நிறுத்தம் அருகே மாவட்ட அண்ணா தொழிற்சங்க சார்பில் மே தின பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது.

  கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.

  கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்க ப்பட்டது. 10 நிமிடம் ஆகியும் மின்சாரம் வரவில்லை.

  இதனால் மேடையில் இருந்த அ.தி.மு.க. பிரமுகர்கள் ஆவேசமடைந்தனர். அவர்கள் மின்வெட்டை கண்டித்து நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

  முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ சம்பத், மாவட்ட எம்ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் ஏழுமலை மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் தி.மு.க. அரசை கண்டித்தும் மின்சாரம் துண்டித்தை கண்டித்தும் தமிழகத்தில் தினசரி 5 மணி நேரம் மின்வெட்டு நடைபெறுவதாகவும் கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் சென்னை பெங்களுர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

  அப்போது அ.தி.மு.க.வினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அ.தி.மு.க.வினர் சாலை மறியலை கைவிட்டனர்.

  இதனை தொடர்ந்து பொதுக்கூட்டம் தொடர்ந்து நடந்தது. மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். 
  Next Story
  ×