என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கிரஸ் கட்சியினர் உப்பு அள்ளினர்.
    X
    காங்கிரஸ் கட்சியினர் உப்பு அள்ளினர்.

    2024 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்- கே.எஸ்.அழகிரி பேட்டி

    2024 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
    வேதாரண்யம்:

     வேதாரணியம் உப்பு சத்தியாக்கிரக நினைவு கட்டிட வளாகத்தில் உள்ள தியாகி சர்தார் வேதரத்தினம் மற்றும் வைரப்பன் சுப்பை பிள்ளை சிலைக்கு காங்கிரஸ் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

    பின்னர் அகஸ்தியன்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு  ஸ்தூபியில் அருகே  உப்பு அள்ளியும், நினைவு தூபிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

     இதில் சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு, சர்தார் பேரன்கள் வேதாரத்தினம், கேடிலியப்பன், முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக நாகையில் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    2024 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற அணிகள்தான் இந்தியாவில் வெற்றி பெறும். 
    கடந்த 7 ஆண்டுகளாக நடைபெறும் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

     8 மாநிலங்களில் நிலக்கரி ஒரு நாளைக்கு தான் கையிருப்பு உள்ளது.அந்த மாநிலங்களிலும் அனல் மின் நிலையங்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகிறது. 
    மாநில அரசுகளே வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்து கொள்ளலாம் என்பது சாத்தியமல்ல.

     இலங்கையில் பொருளாதாரத்தை நிலை நிறுத்த வேண்டும் என்றால் சுயசார்பு நிலை வேண்டும். அதற்கு இந்தியா உதவி செய்யும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    அப்போது மாநில செயலாளர் நௌஷாத்,விவசாய பிரிவு மாநில தலைவர் மீரா உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×