என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
ஒன்றியக்குழு கூட்டம்
மன்னார்குடியில் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது.
மன்னார்குடி:
மன்னார்குடியில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.
ஒன்றியக்குழு துணை தலைவர் வனிதாஅருள்ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் இடையே நடந்த விவாதட வருமாறு:-
ஜெயக்குமார் (அ.தி.மு.க):- உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு கூடம் பழுதாகி உள்ளது. இதற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
செந்தாமரைசெல்வி (தி.மு.க):- சுந்தரக்கோட்டை தாய்சேய் நல விடுதி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
கோவில்வினோத் (அ.தி.மு.க):- பரவாக்கோட்டை, கூப்பாச்சிகோட்டை பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. இதனால் குடிநீர் விநியோகம், விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே கோடைகாலத்தை பயன்படுத்தி நீர்நிலைகளை தூர்வார வேண்டும்.
செல்வம் (பா.ஜ.க):- பரவாக்கோட்டை ஊராட்சி தொடக்க பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். எனவே கூடுமல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
இதற்கு பதில் அளித்து மனோகரன் பேசியதாவது:-
பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிப்பது குறித்து சம்பந்தபட்ட துறைக்கு கடிதம் அனுப்பி வைக்கப்படும். கீழத்திருப்பாலக்குடி, பரவாக்கோட்டையில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு புதிய டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த ஆண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு ரூ.3.3 கோடி நிதி வந்தது. நடப்பாண்டு ரூ.1.12 கோடி மட்டுமே வந்துள்ளது. கூடுதல் நிதி வரும்போது உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story