என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் தொடங்க கடன் உதவி
தொழில் துவங்குவதற்காக கடன் கேட்டு திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 212 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
திருப்பூர்:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்புக்கான வங்கி கடன் வழங்கும் முகாம் திருப்பூர் கலெக்டர் அலுவலக அரங்கில் நடந்தது. மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் ஆவின் நிறுவனம் இணைந்து நடத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் கண்ணன் உள்ளிட்டோர் துவக்கிவைத்தனர். மாவட்டம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் 212 பேர், சுய தொழில் துவங்க கடன் கேட்டு முகாமில் விண்ணப்பித்தனர்.
இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கி, ஈரோடு, கோவை கூட்டுறவு வங்கியாளர்கள், மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்தனர். பெட்டிக்கடை, மளிகை கடை, ஆடை தயாரிப்புக்காக தையல் மெஷின் வாங்குவது உள்பட பல்வேறு சுய தொழிலுக்காக மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்துள்ளனர்.
'நீட்ஸ்', பிரதமரின் வேலை உருவாக்கும் திட்டம் போன்ற திட்டங்களில், சுய தொழில் துவங்க மானியத்துடன் கடன் பெறுவது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
Next Story