என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    உயர் அழுத்த மின்கம்பம் வீடுகள் மீது விழுந்து கிடப்பதையும், சேதமடைந்த வீடுகளையும் படத்தில் காணலாம்
    X
    உயர் அழுத்த மின்கம்பம் வீடுகள் மீது விழுந்து கிடப்பதையும், சேதமடைந்த வீடுகளையும் படத்தில் காணலாம்

    பொள்ளாச்சியில் சூறைக்காற்றுடன் மழை: உயர் அழுத்த மின் கம்பங்கள் சாய்ந்து 3 வீடுகள் சேதம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பொள்ளாச்சி கோவை சாலை சி.டி.சி. மேடு பகுதியில் அமைந்துள்ளது அண்ணா காலனி. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் அடித்து வந்தது.

    நேற்று மதியத்திற்கு பிறகு வானம் கடும் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. மாலையில் திடீரென சாரல் மழை பெய்ய தொடங்கியது.

    இரவு வரை சாரல் மழை நீடித்தது. இந்த நிலையில் நள்ளிரவில் சூறை காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக பஸ் நிலைய சாலை உள்பட முக்கிய பகுதிகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    பொள்ளாச்சி கோவை சாலை சி.டி.சி. மேடு பகுதியில் அமைந்துள்ளது அண்ணா காலனி. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த குடியிருப்புகளுக்கு அருகில் புதிய பள்ளி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அதன் பணிக்காக அங்கு தங்கி வேலை பார்ப்பவர்களுக்கு தகர கொட்டகை உடன் வீடு ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக பள்ளி கட்டப்பட்டு வரும் இடத்தில் இருந்த கொட்டகை காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பறந்தது.

    பறந்த வேகத்தில் தகர கொட்டகை அந்த பகுதியில் இருந்த உயர் அழுத்த மின் கம்பத்தின் மீது விழுந்தது. இதில் அண்ணா காலனி பகுதியில் இருந்த மின் கம்பம் அடியோடு சாய்ந்து குடியிருப்புகள் மீது விழுந்தது. இதில் 3 வீடுகள் சேதமடைந்தது.

    சத்தம் கேட்டதும் வீட்டிற்குள் இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியில் ஓடி வந்தனர். அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் மின்சாரம் இல்லாததால் பெரும் அசாம்பாவிதமும், உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில். குடியிருப்புகளுக்கு மத்தியில் உயர் மின்னழுத்த கம்பங்கள் இருக்கின்றன.

    5 ஆண்டுக்கு ஒரு முறையாவது இந்த மின்கம்பங்கள் பழுது பார்க்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை இந்த மின் கம்பங்கள் ஒரு முறை கூட பழுது பார்த்ததில்லை.

    கம்பத்திற்கு அடியில் துருப்பு படிந்து சேதம் அடைந்திருந்தது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தகவல் கொடுத்தும் வரவில்லை. யாரும் இதை கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×