search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அணை
    X
    அணை

    கொடிவேரி தடுப்பணையில் 6 நாட்கள் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும் போது, தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இன்று முதல் வரும் 4ந் தேதி வரை பொதுமக்கள் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் அனுமதி இல்லை என்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருேக கொடிேவரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீர் கொடிேவரி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும் கண்டு ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் உளபட தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    மேலும் விடுமுறை நாட்கள் மற்றும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். அணைக்கு வரும் பொதுமக்கள் தடுப்பு அணையில்  கொட்டும் தண்ணீரில் குளித்தும் மகிழ்வார்கள். மேலும் அங்கு விற்பனை செய்யப்படும் மீன்களை ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுவார்கள். இதற்காகவே பலர் தடுப்பணைக்கு வருவார்கள்.

    இந்த நிலையில் பவானி சாகர் அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் வரத்து குறைந்து பாறைகளாக காட்சி அளிக்கிறது.

    இந்த நிலையில் கொடிவேரி தடுப்பணை பகுதியில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வரும் 4ந் தேதி (புதன்கிழமை) வரை 6 நாட்களுக்கு பொதுமக்கள் கொடிவேரி தடுப்பணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு உள்ளே செல்ல தடை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும் போது, தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இன்று முதல் வரும் 4ந் தேதி வரை பொதுமக்கள் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் அனுமதி இல்லை என்றனர்.

    Next Story
    ×