என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீ விபத்து
கடலூர் அருகே மாரியம்மன் கோவில் கீற்று கொட்டகைக்கு தீ வைப்பு?
கடலூர் அருகே மாரியம்மன் கோவில் கீற்று கொட்டகைக்கு யாரேனும் தீ வைத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே சி.என். பாளையம் பஸ் நிலையம் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கீற்று கொட்டகையால் வேயப்பட்டு உள்ளது.
இன்று காலை திடீரென்று கோவில் கீற்று கொட்டகையில் தீ மளமளவென எரிய தொடங்கியது. இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த ஊருக்குள் காட்டு தீ போல பரவியது. உடனே அங்கு உள்ளவர்கள் திரண்டனர். அவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை.
இது பற்றி நெல்லிகுப்பம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவா தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். எரிந்து கொண்டிருந்த கோவில் கீற்றுக் கொட்டகை தீயை அணைத்தனர். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் கோவில் கீற்று கொட்டகைக்கு யாரேனும் தீ வைத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
Next Story






