search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை
    X
    விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை

    கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை

    அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கான பிரச்சினையை நிர்வாகத்துடன் பேசி சரியான தீர்வு காணுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
    கடலூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் தொழிலாளர் விடுதலை முன்னணி செயற்குழு கூட்டம் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைவர் பாஸ்கர், செயலாளர் சக்திவேல், கூட்டமைப்பு தலைவர் கல்யாணசுந்தரம், பொருளாளர் சீனிவாசன், அலுவலக செயலாளர் சங்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஆகஸ்டு 17-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பிறந்த நாள் விழாவை மணி விழாவாகக் கொண்டாடுவது. அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கான பிரச்சினையை நிர்வாகத்துடன் பேசி சரியான தீர்வு காணுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×