என் மலர்
உள்ளூர் செய்திகள்

சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
கருவேல மரங்கள் அகற்றம்
சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சியில் உள்ள பெரிய கண்மாயில் நீர்வளத்துறையின் சார்பில் தனியார் வங்கி பங்களிப்பு டன் மேற்கொள்ளப்பட உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கியது. இதை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் நீர்வள ஆதாரங்களை சீரமைத்து நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் துரித மாக நடவடிக்கை எடுத்து வருகிறார். அதனடிப்படை யில் மழைக்காலங்களில் பெறப்படும் தண்ணீரை வீணாக்காமல் சேமிப்பதற்கு ஏதுவாக வரத்து வாய்கால், கால்வாய்கள், ஏரிகள், மத குகள் மற்றும் பிற நீர்நிலை கள் ஆகியவற்றை புனரமைத் தல், பலப்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளவும் மற்றும் கலிங்குகள், மதகு களை மறு கட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைந்திருக்கும் செடிகளை அகற்றுதல், நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்றுதல் போன்ற பல்வேறுப் பணி களை மேற்கொண்டு, நீர்நிலைகளை சீரமைத்திட அறிவுறுத்தி உள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றி யங்கள், 11 பேரூராட்சிகள், 4 நகராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகளான கண்மாய், குளம், குட்டை, வரத்துவாய்க் கால், சாலை பகுதிகள், அரசுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் பெரிய கண்மாயை பொறுத்த வரை மருதுபாண்டியர்கள் காலத் தில் உருவாக்கப்பட்ட கண்மாய் ஆகும். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவில் உள்ள முடிமலை, கரந்தமலை, களவற்காடு வனப்பகுதியில் பாலாறு உற்பத்தியாகி, நத்தம் அருகில் உள்ள செந்துரை கிராமத்திலிருந்து ஆறாக வடிவு பெற்று திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டம் பகுதிகளில் தென்கிழக்காக பாய்ந்தோடி முடிவில் திருப்பத்தூர் பெரியகண்மாயை வந்தடைகிறது.
இந்த கண்மாயின் பாசனப்பரப்பு 1023.93 ஏக்கர் (414.38 ஹேக்டர்) ஆகும். 75 மில்லியன் கனஅடி நீர்தேக்கும் திறன் கொண்ட தாகும்.
திருப்பத்தூர் பெரிய கண்மாயில் உள்ள சீமைக் கருவேல் மரங்களை அகற்றி சீரமைப்பதன் மூலம் தண்ணீர் வீணாவது தடுக்கப் பட்டு விவசாய பணி, குடிநீர் தேவைகள் மேம்படுவதோடு கால்நடைகளுக்கும், கூடுதல் நீர் ஆதாரம் கிடைப்பதற்கும் வழிவகை ஏற்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஊராட்சி ஒன்றிய தலைவர் சண்முகவடிவேல், திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, மானாமதுரை நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, ஆவின் தலைவர் சேங்கைமாறன், செயற் பொறியாளர் (நீர்வளத்துறை, மணிமுத்தாறு, வடிநிலக் கோட்டம், தேவகோட்டை) சுப்பிரமணியன், பேரூராட்சி துணைத்தலைவர் கான் முகமது, உதவி செயற் பொறியாளர் (சருகனியாறு வடிநில உபகோட்டம், திருப் பத்தூர்) சங்கர், உதவி பொறியாளர் ஆனந்த மரிய வளன், உதவி பொறியாளர் (பேரூராட்சிகள்) ரங்கராஜன், திருப்பத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், ஐ.சி.ஐ. சி.ஐ., வங்கியின் மண்டல மேலாளர்கள் மணிகண்டன், கிருஷ்ணன், மேலாளர்கள் ராமலிங்கம், கண்ணதாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






