என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட ஏர்ஹாரன்கள்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட ஏர்ஹாரன்கள்.

    பஸ்களில் ஏர்ஹாரன்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - அதிகாரிகள் எச்சரிக்கை

    பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பஸ்களில் ஏர் ஹாரன்கள் பயன்படுத்துவது குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பஸ் ஓட்டுனர்களை வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரித்தார்.
    பல்லடம்;

    பல்லடத்தில் தனியார் பஸ்கள், வேன்கள் மற்றும் வாகனங்களில் விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ‘ஏர்ஹாரன்’கள் பயன்படுத்தப்படுவதால் பொது மக்கள்,வாகன ஓட்டிகள் அவதிபட்டு வந்தனர்.

    இதுகுறித்து விதிகளை மீறி ஏர் ஹாரன்கள் பயன்படுத்துவது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பல்லடம் பஸ் நிலையத்தில் திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் தலைமையில், போக்குவரத்து ஆய்வாளர்கள் நிர்மலா தேவி (பல்லடம்), சத்தியமூர்த்தி (காங்கேயம்) உள்ளிட்ட அதிகாரிகள் தனியார் பஸ்களில் சோதனை மேற்கொண்டனர். 

    இதில் 27 பஸ்களில் இருந்த ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விதிகளை மீறி ஏதாவது பொருத்தி இருந்ததற்காக அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பஸ்களில் ஏர் ஹாரன்கள் பயன்படுத்துவது குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பஸ் ஓட்டுனர்களை வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரித்தார்.
    Next Story
    ×