என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேசிய போது எடுத்தபடம்.
கருங்குளத்தில் விழிப்புணர்வு கூட்டம்
காவல்துறை சார்பில் மாற்றத்தை தேடி என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் கருங்குளத்தில் நடந்தது.
செய்துங்கநல்லூர்:
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் மாற்றத்தை தேடி என்ற தலைப்பில் பொது-மக்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நடந்தது.
இதில் டி.எஸ்.பி. வெங்கடேசன், ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் அருள், சப் இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், கருத்தையா, ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-
இந்த மாற்றத்தை தேடி திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது.
சமீபத்திய குற்ற சம்பவங்களின் பின்னணியில் போதைப் பொருள் பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது.
போதைக்கு அடிமையான குற்றவாளிகள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றச் செயல்களில் துணிச்சலாக ஈடுபடுகின்றனர். தனிநபர் குறுகிய கால போதை பழக்கத்திற்காக போதைப் பொருளை பயன்படுத்துவதனால் அவரது குடும்பம் மற்றும் குழந்தைகள் வறுமையில் பாதிக்கப்-படுகின்றனர்.
இதனை தடுப்பதற்காகவே இந்த கூட்டம் ஒவ்வொரு கிராமங்களிலும் நடைபெற உள்ளது.
39 குறிப்புகள் மூலம் இந்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது.
எனவே பொதுமக்களை காப்பதற்கு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் . இவ்வாறு அவர் பேசினார்.

Next Story