என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பக்தர்கள் கோமாளி, கரடி வேடமிட்டவாறு பாலமலை யாத்திரை சென்ற காட்சி.
    X
    பக்தர்கள் கோமாளி, கரடி வேடமிட்டவாறு பாலமலை யாத்திரை சென்ற காட்சி.

    பாலமலை யாத்திரை தொடங்கிய பக்தர்கள்

    குமாரபாளையம் பகுதியில் இருந்து பாலமலை யாத்திரை தொடங்கிய பக்தர்கள்
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் பாலமலை யாத்திரையை தொடங்கினர். 
    இது பற்றி விஸ்வநாதன் உள்ளிட்ட  பக்தர்கள்  கூறியதாவது: 
    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகில் உள்ள பாலமலையில் பழமையான சிவன் கோவில் உள்ளது. 

    ஆண்டுதோறும் சித்திரை மாதம் சனிக்கிழமைகளில் பக்தர்கள் இங்கு உள்ள சிவனை வணங்கி வருவது வழக்கம். குமாரபாளையம் அருகே வீரப்பம்பாளையம், வீ. மேட்டூர், அருவங்காடு, புதுப்பாளையம், ரங்கனூர், எளையாம்பாளையம், பூலாம்பட்டி, எடப்பாடி, தேவூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள், அந்தந்த பகுதி கோவில்களில்  சிறப்பு வழிபாடு நடத்தி பாலமலைக்கு பயணம் தொடங்குவார்கள். 

    இந்த யாத்திரையின்போது கோமாளி, கரடி, சிங்கம் உள்ளிட்ட பல வேடம் அணிந்து செல்வதும் வழக்கமாக உள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மலை ஏற தொடங்கினால், சனிக்கிழமை மாலை  6  மணியளவில் மலை உச்சியில் உள்ள கோவிலை சேருவார்கள். 

    மேலும் அவர் கூறுகையில், சொந்த ஊரிலிருந்து கால் நடையாக சென்று மலை  ஏறி சாமி தரிசனம் செய்தவர்கள் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதீகம் என்றார். 
    Next Story
    ×