என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலியல் தொல்லை
    X
    பாலியல் தொல்லை

    சிறுமிக்கு பாலியல் தொல்லை- ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த பெற்றோர்

    விழுப்புரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு சிறுமியின் பெற்றோர் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே நன்னட்டாம்பாளையத்தில் அரசு நிதிஉதவி பெறும் ஆரம்பப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 4 -ம் வகுப்பு ஆசிரியர் ஒருவர், அடிக்கடி பள்ளி சிறுமிகளிடம் பாலியல் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது.

    இதையறிந்த பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டனர். அங்கு இருந்த ஆசிரியரை முற்றுகையிட்டு தர்ம அடிகொடுத்தனர். தகவல் அறிந்த வளவனூர் போலீசார் அங்கு சென்றனர். ஆசிரியரைமீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தால் திடீர் பரபரப்பு நிலவியது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×