என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    பின்னலாடை நிறுவனங்கள் ஆற்றல் சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும் கருத்தரங்கில் அறிவுறுத்தல்

    நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் மேலாண்மை, கார்பன் வெளியேற்றத்தை குறைத்தல், ஆற்றல் சேமிப்பில் பின்னலாடை உற்பத்தி துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
    திருப்பூர்:

    தொழில்நுட்ப தகவல், முன் கணிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் (டைபேக்) மற்றும் சஸ்டெய்னபிள் கம்யூனிட்டி இன்ஸ்டிடியூட் சார்பில் ஆற்றல் சேமிப்பு குறித்த கருத்தரங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் நடந்தது. 

    ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் தலைமை வகித்தார்.

    இதில் ‘டைபேக்‘ நிர்வாக செயல் இயக்குனர் பிரதீப் ஸ்ரீவஸ்தவா பேசியதாவது:-

    ’நிப்ட்-டீ’ கல்லூரி மற்றும் ‘டைபேக்‘ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பூரில், பின்னலாடை துறையில் உள்ள தொழில்நுட்ப இடைவெளிகளை கண்டறிவதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் மேலாண்மை, கார்பன் வெளியேற்றத்தை குறைத்தல், ஆற்றல் சேமிப்பில் பின்னலாடை உற்பத்தி துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 

    சாயக்கழிவுநீரை ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சுத்திகரித்தல், காற்றாலை மின் உற்பத்தி என திருப்பூர் பின்னலாடை தொழில் குழுத்தின் சிறப்பம்சங்களை நாடுமுழுவதும் பரவ செய்ய ‘டைபேக்‘ தயாராக உள்ளது. 

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருப்பூர் சாய ஆலை, ரோட்டரி பிரின்டிங் துறையினர் பங்கேற்றனர். 

    முன்னதாக, ‘டைபேக்‘ மற்றும் சஸ்டெய்னபிள் கம்யூனிட்டி இன்ஸ்டிடியூட் அதிகாரிகள், விஞ்ஞானிகள் குழுவினர், முதலிபாளையம் ‘நிப்ட் - -டீ’ கல்லூரியை பார்வையிட்டனர். 

    பின்னலாடை துறையை மேம்படுத்த மேற்கொள்ளவேண்டிய திட்டங்கள் குறித்து, ஏற்றுமதியாளர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.
    Next Story
    ×