என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கில் மருத்துவ கல்லூரி ‘டீன்’ முருகேசன் பேசிய காட்சி.
சொந்தங்களுக்குள் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் - மருத்துவக்கல்லூரி டீன் அறிவுறுத்தல்
ரத்த உறைவு அணு குறைபாட்டால், ஹீமோபீலியா பாதிப்பு ஏற்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில், ‘ஹீமோபீலியா’ நோய் குறித்த கருத்தரங்கம், விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மருத்துவமனை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.
டாக்டர்கள் செண்பகஸ்ரீ, செந்தில்குமார், ராஜகோபால் முன்னிலை வகித்தனர். ஹீமோபிலீயா வந்தவர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்த குறிப்பேடு வழங்கப்பட்டது.
மருத்துவ கல்லூரி ‘டீன்’ முருகேசன் பேசுகையில், ரத்த உறைவு அணு குறைபாட்டால், ஹீமோபீலியா பாதிப்பு ஏற்படுகிறது. இது பரம்பரை நோய் என்பதால், சொந்தங்களுக்குள் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
இந்நோய் பாதித்தவர்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் டாக்டர்களிடம் ஆலோசனை பெறவும், சிகிச்சையின் போது தெரிவிக்கவும் முடியும்.
நமக்கு மட்டும் இப்பிரச்சினை என்ற மனநிலையில் இருந்து மாறுங்கள். பல்வேறு மருத்துவ வசதிகள் உள்ளது என்றார்.’டீன்’ முருகேசனிடம், ஹீமோபீலியா நோயாளிகள் சிலர், ‘உயர்சிகிச்சைக்கு வேலூருக்கும், மருந்து, மாத்திரை வாங்க கோவையும் செல்ல வேண்டியுள்ளது.
திருப்பூரில் மருத்துவ கல்லூரி வந்துவிட்டதால் ஹீமோபீலியா நோயாளிகளுக்கு ஆலோசனை, சிகிச்சை வழங்க இங்கேயே ஏற்பாடு செய்து தர வேண்டும் என முறையிட்டனர். தமிழக சுகாதாரத்துறை, கலெக்டரிடம் ஆலோசித்து 6 படுக்கை கொண்ட சிறப்பு சிகிச்சை பிரிவு துவங்கப்படும் என டீன்’ முருகேசன் உறுதியளித்தார்.
Next Story






