என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு
திடீர் மழை, அவ்வப்போது வெயில் காரணமாக, தக்காளி வரத்து மெல்ல குறைய துவங்கியது. இதனால் விலை உயர்ந்து கிலோ ரூ. 15க்கு தக்காளி விற்கப்பட்டது.
உடுமலை:
உடுமலை பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது.
வரத்து அதிகரித்ததால் கடந்த மாத இறுதியில், தக்காளிக்கு உரிய விலை கிடைக்காமல், கிலோ 5 ரூபாய்க்கு விற்றது. மழை தொடர்ந்து பெய்ததோடு வரத்தும் சரிந்ததால், தற்போது விலை உயர்ந்து வருகிறது.
இம்மாத துவக்கத்தில் ஒரு கிலோ தக்காளி, 5 ரூபாய்க்கு விற்றது.
திடீர் மழை, அவ்வப்போது வெயில் காரணமாக, தக்காளி வரத்து மெல்ல குறைய துவங்கியது. இதனால் விலை உயர்ந்து கிலோ ரூ.15க்கு தக்காளி விற்கப்பட்டது.
தற்போது உடுமலை உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி, 15 முதல் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறியதாவது:
விலையைஎதிர்பார்த்து தக்காளி பயிரிட்ட விவசாயிகள் பலர் கிலோ 5 ரூபாய்க்கு தக்காளி விற்றதால், தக்காளியை பறிக்காமல் அப்படியே தோட்டங்களில் விட்டுவிட்டனர்.
சிலர், உழவுப்பணியும் மேற்கொண்டு விட்டனர். இதனால், தக்காளி வரத்து சந்தைக்கு வெகுவாக குறைந்து விட்டது. தற்போது விலை உயர்ந்துள்ளது. ஆனால் சந்தைக்கு கொண்டு வர விவசாயிகளிடம் தக்காளி இல்லை.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், விரைவில் தக்காளி பழுத்து, விற்பனைக்கு வருவதால், நிலைமையை ஓரளவு சமாளிக்க முடிகிறது.
விலை 5 ரூபாய் என்ற நிலை இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ந்தால், விலை உயருமா, இதே நிலை தொடருமா என்ற குழப்பத்தில் தக்காளி பயிரிடுவதை சிலர் நிறுத்தியே விட்டனர்.
இதனால் தக்காளி வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story






